ஏன் பத்திரிக்கைகள் பா.ம.க. வையும் மருத்துவர் இராமதாசுவையும் கடுமையாக கண்மூடித்தனமாக தாக்குகின்றன....?
Thu, 09 Dec 1999
7.50
ஏன் பத்திரிக்கைகள் பா.ம.க. வையும் மருத்துவர் இராமதாசுவையும் கடுமையாக கண்மூடித்தனமாக தாக்குகின்றன....?
பத்தாம் வகுப்பு(மெட்ரிக்குலேசன்) மட்டுமே படித்த செல்வி.ஜெயலலிதாவை மாபெரும் படிப்பாளி, அறிவாளி போன்ற தோற்றத்தை உருவாக்கும் ஊடகங்கள் MBBS படித்த மருத்தவர் இராமதாசின் மீது ஏற்படுத்திய படிமம் நாம் அறிந்ததே, இதற்கான காரணத்தை ஆராய்ந்தால் நிறைய உண்மைகள் புரியும், இன்று பத்திரிக்கை ஊடகம் யார் கையில் இருக்கின்றது என அனைவரும் அறிந்ததே. தமிழ் ஊடகங்களும், ஆங்கில மற்றும் தேசிய ஊடகங்களும் முழுக்க முழுக்க உயர்சாதியினரின் கையில் இருக்கின்றது, குமுதம், விகடன், தினமலர், இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் என பெரும்பாலான ஊடகங்களும் உயர்சாதியினரின் கையில் உள்ளது, ஏற்கனவே திராவிட கட்சிகளினால் தமிழகத்திலே ராஜரிஷி என்ற பட்டம் பறி போய் கிடக்கின்றது அவர்களுக்கு, இந்த நிலையில் இது என்னடா பிற்படுத்தப்பட்ட இனத்திலிருந்து இன்னுமொரு தலைவர், அவர் பின்னால் பலமானதொரு மக்கள் சக்தி... இப்படியே இவரை விட்டால் தற்போது தம் கட்டுக்குள் அடங்காமல் இருக்கும் திராவிட கட்சிகளைப்போன்றதொரு பிரச்சினை பா.ம.க விடமும்.. இவர்களையும் வளரவிட்டால் இனி எந்த காலத்திலும் ராஜரிஷிப்பட்டம் என்பது கனவே என்ற எதார்த்தத்தை புரிந்து கொண்டன, எனவே இப்போதே அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பத்திரிக்கைகள் வேறெவரையும் விட கண்மூடித்தனமாக பா.ம.கவின் மீதும் மருத்துவர் இராமதாசுவின் மீதும் தாக்குகின்றன.
இதில் ஓரளவு பத்திரிக்கைகள் வெற்றி கண்டுள்ளன.... வன்னிய இனம் தவிர்த்து மற்ற இனத்தினரின் பார்வை இந்த பத்திரிக்கைகளின் பொய்பிரச்சாரத்தால் மாறிக்கிடக்கின்றன.... ஏனெனில் பெரும்பாலானோர் பத்திரிக்கைகளின் வழியாகத்தான் பா.ம.க.வையும் மருத்துவர் இராமதாசுவையும் பார்க்கின்றனர், ஆனால் நாங்களெல்லாம் பாமக வினையும் மருத்துவர் இராமதாசுவையும் பத்திரிக்கை வழியாக பார்க்காமல் அருகிலிருந்து பார்க்கின்றோம்...
ஆனால் சிறிது சிறிதாக இந்த நிலை மாறிக்கொண்டு வருகின்றது, எப்போதும் பா.ம.கவையும் மருத்துவரையும் கடுமையாக தாக்கிக்கொண்டுவந்த குமுதமும் விகடனும் தற்போது கண்மூடித்தனமான போக்கை சிறிது மட்டுப்படுத்தியுள்ளன... ஆனால் தினமலர் இன்னும் கண்மூடித்தனமான தாக்குதலை பாமகவின் மீது தொடர்கின்றன...
மக்களின் பார்வையும் மாறிக்கொண்டுள்ளது, அவர்களுடைய முதல் சாய்ஸ் ஆக பாமக இல்லையென்றாலும் பா.ம.க வேண்டாமென்ற வெறுப்பு இல்லை.... பாமகவின் மீது உண்மையிலேயே வெறுப்பிருந்தால் கூட்டணியில் இருந்த போதிலும் மற்ற இனத்தவர்கள் வாக்களித்திருக்க மாட்டார்கள், ஆனால் உண்மை என்னவெனில் தேர்தலுக்கு தேர்தல் வன்னிய இனம் தவிர்த்த மற்ற வாக்கு வங்கிகளிலும் பாமக ஊடுறுவிக்கொண்டுள்ளது...
பிற அரசியல் தலைவர்களுக்கு மருத்துவரின் மீதான் மிகப்பெரிய எரிச்சல்களுக்கு காரணம் எந்த வித அரசியல், பண பின்புலங்கள் இல்லாமல் பேச்சுத்திறமையில்லாமல், திரைப்பட பின்னனியில்லாமல் மக்களை கவர்ந்திழுக்கும் எந்த ஒரு அம்சமும் இல்லாமல் இருந்த போது எப்படி இவரின் பின்னால் எப்போதும் பின் வாங்காத, அவரை வெறுக்காத ஒரு மக்கள் சக்தி உள்ளது என்ற பொறாமை....
ஆனால் அவருடைய அற்பணிப்புதான் இதற்கெல்லாம் காரணம் என்ற உண்மை அறியாமல் (அல்லது அறிந்து கொள்ள விரும்பாமல்) உள்ளனர்
1987ல் வன்னியர் சங்க போராட்டத்தின் போது வன்னியர்கள் மீதும் வன்னிய கிராமங்களின் மீதும்
கடும் வன்முறைத்தாக்குதல்களை மேற்கொண்ட அரசாங்கத்தால் (எந்த அரசாங்கமாயினும்) இன்று அதே இனத்தின் மீதோ வன்னிய கிராமங்களின் மீதோ கை வைக்கமுடியுமா?? உண்மையென்னவென்றால் அது எந்த அரசாங்கமானாலும் யாராலும் இனி வன்னிய கிராமங்களின் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட முடியாது...
குடிமக்களின் பாதுகாப்பு அரசாங்கத்தின் கையில் ஆனால் அதே அரசாங்கம் வன்முறை செய்யத்துனிந்தால் யார் காப்பது?? இனி அரச வன்முறை பிரச்சினை வன்னிய இனத்திற்கு இல்லை, ஆனால் அதே மாதிரியான பாதுகாப்பு மற்ற பலருக்கும் இல்லை... இந்த உண்மையை உணர்ந்த பலருக்கும் ஒரு இயலாமை, அது மருத்துவர் இராமதாசுவின் மீது வெறுப்பாக வெளிப்படுகின்றது...
எங்கேயோ பெரு நகரங்களில் வாழ்ந்து கொண்டு பா.ம.க. வின் கொடிக்கம்பத்தைக்கூட பார்த்திராமல் பத்திரிக்கைகளின் செய்திகளை வைத்து பா.ம.கவை எடை போடுபவர்கள் அல்ல நாங்கள், பா.ம.க வின் அருகில், மிக அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கின்றோம்...
பொதுவாக சொல்லப்போனால் பா.ம.கவின் மீதும் இராமதாசுவின் மீதுமான மற்ற அரசியல் கட்சிகளை விமர்சிப்பது போல விமர்சிக்காமல் கண்மூடித்தனமாக மிகக்கடுமையான விமர்சனம் செய்வதற்கு காரணம் பொறாமை, இயலாமை, அறியாமை ஆகிய மூன்று ஆமைகள் தான்....
உதிரம் சிந்தி
உயிர் கொடுத்து
பெற்றதிந்த
பாதுகாப்பு
சொந்த நாட்டிலும்
சொந்த ஊரிலும்
சூறாவளியில்
மாட்டிய
வைக்கோல் போராய்
சுற்றி சுற்றி
அடிக்கப்பட்டபோது
சுதந்திரமும் இல்லை
இங்கே
மனித உரிமையும்
மாய்ந்து விட்டன
இங்கே
வாய் கிழிய
ஊலமிடும்
பத்திரிக்கைகளும்
இன்று
வாய் கிழிய
ஊலமிடும்
பத்திரிக்கைகளும்
அன்று
பதறித்துடித்தபோது
பதுங்கிவிட்டன
பத்திரிக்கை தர்மம்
தன்னை
பரணில் தூக்கிப்போட்டு
பத்திரிக்கை தர்மம்
தன்னை
பரணில் தூக்கிப்போட்டு
எப்போதடா வாய்ப்பு
கிடைக்கும்
வாய்ப்பூட்ட போடலாம்
என காத்திருக்கும்
கழுகுகளே
உம் வாயில் மொத்தமும்
மண் தான்...
பார்வைகள் மாறி
பாராளும் காலம்
போய்...
பாராளும் காலத்தில்
பார்வைகள் மாறுகின்றன...
ஒரே இரவில்
உயர்வு தேட
நாங்கள் ஒன்றும்
அது... அல்ல
ஒரே இரவில்
காட்சி மாற
இது ஒன்றும்
கனவு தொழிற்சாலை
அல்ல
காலங்கள் மாறுகின்றன...
காட்சிகளும் மாறுகின்றன...
மொத்தமும் மாற
காத்திருக்கின்றோம்
நாங்கள்
அதுவரை வரும்
தீய்ந்த
வாசனைகளுக்கு
பதில் தர
அலுத்துப்போய்...
மொத்தமும் மாற
காத்திருக்கின்றோம்
நாங்கள்
உயிர் ஈந்து எங்களை வாழ வைத்த தியாகிகளின் பாதம் தொட்டு இந்த பதிவுகளை அவர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்...
நன்றி - குழலி பக்கங்கள் & Murali Periyaswamy
Ramadoss wants Centre to announce economic sanctions against Sri Lanka
Wed, 22 Dec 1999
6.00
Special Correspondent
CHENNAI: Pattali Makkal Katchi leader S. Ramadoss on Monday urged political parties in Tamil Nadu to prevail upon the Centre to announce economic sanctions against Sri Lanka, if a solution was not found to the sufferings of the Sri Lankan Tamils.
“We should also make the Indian government announce that neither the country nor the entrepreneurs will invest in Sri Lanka,” Dr. Ramadoss said in a statement.
He said Tamils’ sufferings were continuing even after the war and many of them were living behind barbed wire without any rights.
“If the countries that vociferously advocate human rights and liberation of nationalities are maintaining silence over the Sri Lankan Tamils issue, it is because India is remaining a mute spectator,” he said.
Dr. Ramadoss said the Christians in Sri Lanka had organised a protest in support of the Tamils and the Tamils in Tamil Nadu also should raise their voice.
சமீபகாலமாக இந்தியாவில் நடத்தப்படும் அனைத்து தேர்தல்களிலும் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரம் பயன்படுத்தும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இதில் தில்லுமுல்லு நடக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை கூறி மின்னணு எந்திர ஓட்டுப்பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதனை தொடர்ந்து அமெரிக்க பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர் நிபுணர்கள் குழுவினர் இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஓட்டுப்பதிவு எந்திரங்களை ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து, அது தொடர்பாக இந்திய தேர்தல் கமிஷனுக்கு அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எளிமையானவை. நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதில் வேறு புதிய வகையில் பிரச்சினைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதை ஆராய்ந்து குழு உறுப்பினர்களின் விவாதங்களை கேட்டறிந்த பின்னர் இந்த முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம். அதன்படி இந்திய எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பை தருவதில்லை. தேர்தல் முடிவுகளில் தெளிவான தகவலை தருவதில்லை. சரிபார்ப்பு வசதியில்லை போன்ற குறைகள் உள்ளன. இதனால் தேர்தல் முடிவுகளில் நம்பகத்தன்மை கிடைக்காது என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.
இந்த வகை எந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்புண்டு. எனவே இந்திய தேர்தல் ஆணையம் வேறுவிதமான எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு எந்திரங்களை உருவாக்கு வதற்கு முயற்சி செய்ய வேண்டும். எங்களது ஆராய்ச்சி குழுவினர் உலகம் முழுவதும் இது போன்ற வாக்குப்பதிவு எந்திரங்களை பரிசோதித்து மதிப்பீட்டு அறிக்கையை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
சமீபகாலமாக இந்தியாவில் நடத்தப்படும் அனைத்து தேர்தல்களிலும் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரம் பயன்படுத்தும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இதில் தில்லுமுல்லு நடக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை கூறி மின்னணு எந்திர ஓட்டுப்பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதனை தொடர்ந்து அமெரிக்க பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர் நிபுணர்கள் குழுவினர் இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஓட்டுப்பதிவு எந்திரங்களை ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து, அது தொடர்பாக இந்திய தேர்தல் கமிஷனுக்கு அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எளிமையானவை. நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதில் வேறு புதிய வகையில் பிரச்சினைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதை ஆராய்ந்து குழு உறுப்பினர்களின் விவாதங்களை கேட்டறிந்த பின்னர் இந்த முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம். அதன்படி இந்திய எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பை தருவதில்லை. தேர்தல் முடிவுகளில் தெளிவான தகவலை தருவதில்லை. சரிபார்ப்பு வசதியில்லை போன்ற குறைகள் உள்ளன. இதனால் தேர்தல் முடிவுகளில் நம்பகத்தன்மை கிடைக்காது என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.
இந்த வகை எந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்புண்டு. எனவே இந்திய தேர்தல் ஆணையம் வேறுவிதமான எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு எந்திரங்களை உருவாக்கு வதற்கு முயற்சி செய்ய வேண்டும். எங்களது ஆராய்ச்சி குழுவினர் உலகம் முழுவதும் இது போன்ற வாக்குப்பதிவு எந்திரங்களை பரிசோதித்து மதிப்பீட்டு அறிக்கையை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல்
Wed, 01 Dec 1999
10.10
இதற்காக தொடர்ந்து குரல் கொடுத்த எங்கள் மருத்துவர் அய்யா அவர்களுக்கு எங்கள் நன்றி.... நன்றி.... நன்றி.... இதற்கு உறுதுணையாக இருந்த லாலு பிரசாத் யாதவ், முயலாம் சிங், சரத் யாதவ் உள்ளிட்ட சமூக நீதியில் அக்கறை கொண்ட தலைவர்களுக்கு நன்றி!!
டிசம்பரில் தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிக்கும் பணி தொடங்கும்போது ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளலாம் எனவும் அமைச்சரவைக்கு அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பாக முடிவெடுக்க பிரணாப் முகர்ஜி தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு புதன்கிழமை கூடியது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தலாம் என இந்தக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பான இறுதி முடிவை அமைச்சரவை விரைவில் அறிவிக்கும் எனவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: மருத்துவர் ராமதாஸ்
Wed, 01 Dec 1999
10.10
தமிழகத்திஸ் மீண்டும் மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும், விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது. வரும் சுதந்திர தினத்தன்று கொடியேற்றி வைத்து பேசும்போது அவர் இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.
அதன் மூலம் குடிப்பழக்கத்திலிருந்து மக்களுக்கு விடுதலை அளிக்க வேண்டும்.மது ஒழிக்கப்பட வேண்டும் என்று வள்ளுவர் காலம்தொட்டு பெரியவர்களாலும், தலைவர்களாலும் வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. கள் உண்ணாமைக்கு தனி அதிகாரம் ஒதுக்கி "கள் உண்பவர்களை பெற்ற தாயும் வெறுப்பர்' என்று வள்ளுவர் கூறியுள்ளார்.
குடியும், போதையும் சாத்தானின் இரு ஆயுதங்கள் என்றார் மகாத்மா காந்தி. தமிழகத்தைப் பொருத்தவரை மதுவிலக்கு பிரசாரத்தை முன்னின்று நடத்தியவர்களில் ராஜாஜி முதன்மையானவர். மதுப்பழக்கத்தில் இருந்து மக்களை மீட்டுவிட்டால் அவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கக்கூடிய பெருந்தடைகள் பலவும் தகர்க்கப்பட்டு விடும் என்பது அவரின் அசைக்க முடியாத நம்பிக்கை. மதுவின் தீமையை உணர்ந்து தனது சொந்த தோட்டத்தில் இருந்த தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தவர் பெரியார். அவர் வழியில் அண்ணாவும் மதுவிலக்கை வலியுறுத்தி, இறுதிவரை அதில் உறுதியாக இருந்தார்.1971-ம் நிதிநிலை காரணமாக மதுவிலக்கு சட்டம் ஒத்தி வைக்கப்பட்டபோது, அதனை எதிர்த்து காமராஜர் போர்க்குரல் எழுப்பினார்.
1974-ல் மீண்டும் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி உத்தரவிட்டபோது, அதுவரையில் நெஞ்சில் உறுத்திக் கொண்டிருந்த உணர்வு நீங்கி விட்டதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.மதுவிலக்கை அமல்படுத்துவது கோடிக்கணக்கில் செலவிடும் இலவசத் திட்டங்களை விடவும் மேலானது.மதுக் கடைகள் மூலம் கிடைக்கும் வருமானம் அரசுக்கு பெரிதாக தோன்றலாம். ஆனால், மதுவினால் ஏற்படும் சமுதாய சீர்கேடுகளைப் பார்க்கும்போது மதுவிலக்கை அமல்படுத்துவதே நல்லது என்பது தெரிய வரும். அரசின் நிதிநிலை சீரடைய வருவாயை பெருக்குவது மட்டுமே தீர்வாகாது. செலவைக் கட்டுப்படுத்துவதும் அதற்கு ஒரு வழியாகும்.
அரசுத் துறைகளின் செயல்திறனை மேம்படுத்தி செலவுகளைக் கட்டுப்படுத்தி நிதிநிலைமையை சீர்படுத்திவிட முடியும்.மதுவினால் வரும் வருமானம் அரசுக்கு அவமானம் எனக்கருதி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழுவாகச் சென்று முதல்வரைச் சந்தித்தபோது அளித்த வாக்குறுதியிலும், இப்போது அளித்த வாக்குறுதியிலும் முதல்வர் கருணாநிதி உறுதியாக நின்று மீண்டும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
பா.ம.க., துணையின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது : அன்புமணி
Wed, 01 Dec 1999
10.10
விழுப்புரம் : ""பெண்ணாகரம் பார்முலாவைப் போல் இனி விஞ்ஞானப் பூர்வமாக அரசியல் பணியாற்றுவோம்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பேசினார்.
விழுப்புரத்தில் நடந்த பா.ம.க., மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: காசு கொடுப்பதால் கட்சி மாறுபவர்களை தடுக்க வேண்டும். இனி இப்படித்தான் செயல்பட வேண்டும் என திட்டம் வகுத்துள்ளோம், விஞ்ஞானப் பூர்வமான அரசியல் பணியாற்றப் போகிறோம். கல்வி, சமூக நீதி, மொழி, இளைஞர் ஒருங்கிணைப்பு என முதன்மை கொள்கையுடன் நமது கட்சி செயல்படுகிறது. அனைத்து தரப்பு பிரச்னைகளுக்கும் ராமதாஸ் குரல் கொடுத்து வருகிறார். அனைத்து சமூகத்தினரின் ஆதரவினையும் பெற வேண்டும். சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது 5,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி திட்டம் செயல்படுத்தியுள்ளேன். அதில் நாம் பயன்படுத்தி வரும் ஜிப்மரில் 1,000 கோடி ரூபாய் ஒதுக்கி உலகத் தரத்திலான மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.
இந்த 108 ஆம்புலன்ஸ் இந்தியா முழுவதும் நான் கொண்டு வந்த திட்டம், அமெரிக்க- இந்திய மருத்துவக் குழு ஆராய்ந்து ஓராண்டு முயற்சியில் 950 கோடி ரூபாய் நிதியில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது. சிலர் தாங்கள் கொண்டு வந்ததாக சொல்லிக் கொள்கின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் தான் அதிகளவில் குடிசை வீடுகள் உள்ளன. தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் ஆண்டதால் என்ன பயன். 40 சதவீதம் வன்னியர், 30 சதவீதம் தாழ்த்தப்பட்டவர்கள் குடிசையில் உள்ளனர். இதற்கு போராடினால் ஜாதிக் கட்சி என்கின்றனர். அனைத்து சமூகத்தினரும் சமமாக முன்னேறினால் தான் சமூக நீதி. ஜாதிக் கணக்கெடுப்பை நடத்தச் சொன்னால் செலவிட கருணாநிதி பணம் இல்லை என்கிறார். சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் இவர்கள் தாமதப்படுத்துகின்றனர். வி.ஏ.ஓ.,க்களே இந்த கணக்கை கொடுத்து விடுவர். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு, கருணாநிதியிடம் மனம் இருக்கிறது.
நமது கட்சியில் கோஷ்டியில்லை, உழைப்பவர்களுக்கு முன்னுரிமை. ஏழு தொகுதியில் ஏமாந்து போனோம். இனி ஏமாற மாட்டோம், விஞ்ஞானப் பூர்வமாக பெண்ணாகரம் பார்முலா செயல்படுத்தப்படும். அங்கே நாம் தான் உண்மையான வெற்றி பெற்றோம். பா.ம.க., துணையின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது. எதிர்காலத்தில் தமிழகத்தை பா.ம.க., ஆளும். இவ்வாறு முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பேசினார். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியதையடுத்து மதுவிலக்கு அமல்படுத்துவதாக கூறிய முதல்வருக்கு நன்றி தெரிவிதார்.
வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு பா.ம.க., ஆர்ப்பாட்டம்
Wed, 29 Dec 1999
10.10
தமிழகத்தில் வன்னியர்கள் கல்வி, வேலைவாய்ப்பில் பின் தங்கியுள்ளதால், 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வேண்டுமென பா.ம.க., போராட்டம் நடத்தியது. 21 உயிர்கள் பலி கொடுத்து, 1989ல் 107 சாதிகளுக்கும் சேர்த்து, 20 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தது. பின், இவை 109 சாதிகளுக்கென மாறியது. தற்போது வன்னியர்களுக்கு அதிகளவாக 9 சதவீத வாய்ப்பு தான் கிடைக்கிறது. தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு, நாளை (ஜூலை 28), தமிழகம் முழுவதும் கலெக்டர், தாசில்தார் அலுவலகங்கள் முன் போராட்டம் நடைபெறும். சென்னையில் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடக்கும். இவ்வாறு ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
அரசியல் அரங்கில் பா.ம.க அசைக்க முடியாத சக்தி நிறுவனர் ராமதாஸ்
Wed, 01 Dec 1999
10.10
தமிழக அரசியல் அரங்கில் அசைக்க முடியாத சக்தி பா.ம.க. என்பது பென்னாகரம் இடைத்தேர்தல் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது என்று அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பென்னாகரம் தொகுதியில் பணத்தின் பக்கம் பலமாக காற்று வீசுகிறது என்ற கணிப்பு மெய்யாகியிருக்கிறது. பணநாயகம் வெற்றி பெற்று, ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் 8 கட்சிகளின் துணையுடனும், அனைத்து வசதி வாய்ப்புகளுடனும் ஆளும் கட்சி களமிறங்கியது. பிரதான எதிர்க்கட்சியும் 4 கட்சிகளின் துணையுடன் தேர்தலை சந்தித்தது.
பா.ம.க.வுக்கு மற்றவர்களைப் போல பண பலம் இல்லை. மக்கள் ஆதரவை மட்டுமே நம்பி களமிறங்கினோம். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. தனியாகப் போட்டியிட்டு 41 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கிறோம். இந்த இடைத்தேர்தல் முடிவு எங்களுக்கு தோல்வி அல்ல; தார்மீக ரீதியில் மகத்தான வெற்றியாகும்.
பா.ம.க.வின் செல்வாக்கு சரிந்து விட்டது என்ற சில ஆரூடக்காரர்களின் கணிப்பை, பென்னாகரம் வாக்காளர்கள் பொய்யாக்கியிருக்கிறார்கள். தமிழக அரசியல் அரங்கில் பா.ம.க. அசைக்க முடியாத சக்தி. அரசியலில் பா.ம.க.வின் பங்களிப்பை யாராலும் தவிர்க்க முடியாது. இதை பென்னாகரத்தில் பா.ம.க. தனித்துப் போட்டியிட்டு பெற்றுள்ள 41 ஆயிரத்து 285 வாக்குகள் உறுதிப்படுத்தியிருக்கிறது. பீனிக்ஸ் பறவை போல பா.ம.க. எழுச்சியுடனும், உயிர்த் துடிப்புடனும் வீறுகொண்டு எழுந்து நிற்கிறது. இத்தகைய அங்கீகாரத்தை வழங்கிய பென்னாகரம் வாக்காளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தலை வணிகச் சந்தையாக்கும் போக்கு அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து என்பதை அனைவரும் உணர வேண்டும். குறிப்பாக, தேர்தல் ஆணையம் இந்த ஆபத்தை உணர்ந்து, இதைத் தடுப்பது குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்து பேசி, உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
வாக்குகள் விலைக்கு வாங்கப்படும் தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்வதற்கான அதிகாரம், தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டால் ஒழிய, ஜனநாயகத்தை வீழ்த்திக் கொண்டிருக்கும் பணநாயகத்தை ஒழிக்க முடியாது. இதற்கான சட்ட திருத்தங்களை கொண்டு வர தேர்தல் ஆணையம் முனைப்புடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் உரத்த குரல் கொடுக்க வேண்டும்'' என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இடஒதுக்கீடு விவகாரம்: தமிழக அரசுக்கு அன்புமணி எச்சரிக்கை
Tue, 30 Nov 1999
0.00
வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கேட்டு காஞ்சிபுரத்தில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அன்புமணி தலைமையில் ஊர்வலமாக வந்த வன்னியர் சங்கத்தினர் நகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியது: வன்னியர்கள் பொருளாதரம் மற்றும் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளனர். பெரும்பாலான வன்னியர்கள் குடிசைகளில்தான் வாழ்கின்றனர். எனவே அவர்களின் உயர்வுக்காக 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
இப் போராட்டம் சமூக நீதிக்கான போராட்டம். நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை கணக்கெடுத்தால் வன்னியர்கள் மிகச் சொற்ப அளவிலேயே உள்ளனர். அருந்ததியர்களுக்கு, முஸ்லிம்களுக்கு என்று தனி இடஒதுக்கீடு கேட்டவர் பாமக நிறுவனர் ராமதாஸ். அதன் அடிப்படையில் தற்போது வன்னியர்களுக்கும் கேட்கிறார்.
தமிழக அரசு இந்த கோரிக்கையை பரிசீலித்து தீர்க்க வேண்டும். இல்லையேல் வரும் காலங்களில் போராட்டம் வேறு வடிவத்தில் இருக்கும். ஓராண்டு, இரண்டு ஆண்டு அல்ல இடஒதுக்கீட்டுக்காக நாங்கள் ஏழு ஆண்டுகள் கூட சிறை செல்ல தயாராக இருக்கிறோம் என்றார். ÷இதன் பின்னர் இவர் நிருபர்களிடம் கூறியது, உச்ச நீதிமன்றம் கணக்கெடுப்பை நடத்தி இடஒதுக்கீட்டை அந்தந்த மாநிலங்கள் நிர்ணயித்துக் கொள்வது தொடர்பாக தீர்ப்பு ஒன்றை கூறியுள்ளது.
தமிழக அரசு உடனடியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். எந்த ஜாதியினர் எவ்வளவு பேர் உள்ளனரோ அதற்கு தகுந்தாற்போல் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றார்
பாமக இணையதளம் துவக்கம்.
Thu, 09 Dec 1999
10.50 PM
பாமக பற்றிய தொகுப்புகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுபினர்களின் விவரங்கள் கொண்ட இணையதளத்தினை சேலம் தெய்விகம் திருமண மண்டபத்தில் சேலம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுகுழு கூட்டம் 09.06.2009 காலை 10 மணி அளவில் நடைபெறும் போது www.pmkparty.org என்ற இந்த இணையதளத்தினை மருத்துவர் அய்யா அவர்கள் துவக்கிவைத்தார்.
இந்த இணையதளத்தின் மூலம் கட்சியின் நிகழ்வுகளை அனைவரும் உலகின் எந்த பகுதயில் இருந்தாலும் அறிந்து கொள்ள முடியும்.
புதுச்சேரியில் 100க்கு 70 பேர் வன்னியர்கள் உள்ளனர். ஆனால், மற்ற அரசியல் கட்சிகள் நம்மை கூறுபோட்டு பிரித்து விட்டனர் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற வன்னியர் சமூக மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா புதுவை சமூக முன்னேற்ற சங்கம் சார்பில் கம்பன் கலையரங்கில் நடைபெற்றது.அதில் ராமதாஸ் பேசுகையில், புதுவையில் 100க்கு 70 பேர் வன்னியர்கள் உள்ளனர். ஆனால், மற்ற அரசியல் கட்சிகள் நம்மை கூறுபோட்டு பிரித்து விட்டனர்.புதுவையில் இளைஞர்களை பாமகவில் அதிகம் சேர்க்க வேண்டும். அவர்களிடம் கட்சியை ஒப்படைக்க வேண்டும். முதியவர்கள் பல்வேறு கட்சியிடம் அடமானம் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை இனிமேல் மீட்க முடியாது.புதுவையில் வன்னியர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் இணைந்தால், ஆட்சியை நாம் தான் நடத்துவோம். புதுவையில் ஒரே ஒரு தடவை வன்னியர் ஒருவர் முதல்வராக இருந்தார். அதற்கும் நாம் தான் காரணம். ஆனால், அந்த முதல்வர் வன்னியர் சங்க கூட்டத்தில் வந்து, நான் வன்னியர் என்று கூறுவாரா?. கூறமாட்டார்.அவர் மட்டுமல்ல, மற்ற கட்சிகளிலும் பொறுப்பு வகிப்பவர்கள் கூட வெளிப்படையாக கூறமாட்டார்கள். காரணம், அவர்கள் கட்சியிலுள்ள ஆதிக்க ஜாதி தலைவர்களை மீறி அவர்களால் பேச முடியாது என்றார்.நிகழ்ச்சியில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணியும் பங்கேற்றார்.
இதற்கிடையே ராமதாஸ் அறிக்கையில், இந்த ஆண்டு முதல் தமிழ் வழியில் பொறியியல் பட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதல் கட்டமாக அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் மட்டும் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பிரிவுகளில் தமிழ்வழி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளபடி இது தன்னிகரில்லா திட்டம்தான். ஆனால், அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் மட்டும் அதுவும் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளில் மட்டும் தமிழ்வழிக் கல்வி வகுப்புகளை தொடங்கி இருப்பது போதாது. தமிழுக்கு மறுமலர்ச்சி ஏற்பட வேண்டுமானால் பொறியியல் படிப்புகளில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் தமிழ் வழி வகுப்புகளை தொடங்க வேண்டும்.
மேலும், அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளோடு நின்று விடாமல் மாநிலத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் தமிழ்வழி கல்வி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதிதாக பொறியியல் கல்லூரிகளைத் தொடங்குவதற்கும், ஏற்கெனவே தொடங்கப்பட்ட கல்லூரிகளை தொடர்ந்து நடத்துவதற்கும் தமிழ்வழி கல்வி வகுப்புகளை தொடங்கி நடத்த வேண்டும் என்பதை கட்டாய நிபந்தனையாக விதிக்க வேண்டும்.அத்துடன் மாணவர்கள் பெருமளவில் தமிழ்வழிக் கல்வி வகுப்புகளில் சேர்வதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கும் திட்டம் பொறியியல் பட்டதாரிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். குறிப்பாக மாநில மின்சார வாரியம், பொதுப்பணித்துறை, மாநில அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் பணி நியமனத்தில் தமிழ்வழியில் படித்த பொறியியல் பட்டதாரிகளுக்கு முதல் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.இன்னும் ஓரிரு நாட்களில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை கொண்டாட இருக்கிறோம். அவரின் ஆட்சிக் காலத்தில் தமிழை பயிற்சி மொழியாக கொண்டு படிப்பவர்களுக்கு மாத ஊக்கத் தொகை வழங்கும் திட்டமும், அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டதாக குறிப்புகள் இருக்கின்றன.எனினும் இன்றைக்கும் அதே திட்டத்தை அறிவிக்கும் நிலைமை இருக்கிறது என்றால், அதிகார வர்க்கமும், ஆங்கில மோகமும் அதை நடைமுறைப்படுத்துவதற்கு பெரும் தடையாக இருந்து வந்திருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இந்த தடைகளை தகர்த்தாலொழிய நாம் எதிர்பார்க்கிற பலனை அடைய முடியாது.தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளிப்பதற்கு தனிச் சட்டம் கொண்டு வருவது இந்த தடையை தகர்க்க ஓரளவு துணை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே இந்தச் சட்டத்தை தாமதமின்றி கொண்டு வர வேண்டும்.அடுத்த சட்டப் பேரவை கூட்டத்தொடர் வரும் வரை காத்திருக்காமல் இதை ஓர் அவசரச் சட்டமாக அறிவிக்க வேண்டும். இதன்மூலம் நடப்பு கல்வி ஆண்டிலேயே பொறியியல் பட்டப்படிப்பில் மட்டுமின்றி இதர கல்லூரிகளிலும் தமிழ்வழிக் கல்வி வகுப்புகளில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்ந்து படிப்பதற்கு வழிவகுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தோற்றம்
Tue, 09 Jun 2009
06:21 AM
பாட்டாளி மக்கள் கட்சியின் தோற்றம்
இந்த பதிவில் பாட்டாளி மக்கள் கட்சியின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி பார்ப்போம்.பாமக 1989 ம் ஆண்டு மருத்துவர் இராமதாசு அவர்களால் நிறுவப்பட்டது.அவருக்கு தோளோடு தோள்நின்று இந்த கட்சியை உருவாக்கியவர்கள் பலர்,பாமகவின் கொள்கைகள் சட்டதிட்டங்கள் எல்லாம் முன்னாள் நீதிபதி,முன்னாள் இ.ஆ.ப (IAS) அதிகாரிகள் மற்றும் பல கற்றறிந்த பெரியவர்களாள் உருவாக்கப்பட்டது.
பாமகவின் கொள்கைகள் என்ன?
கம்யூனிசத்தின் சிறந்த அம்சங்கள்,
சோஷலிசத்தின் முக்கிய அம்சங்கள்,
பெரியாரின் திராவிட கொள்கைகளில் சில,
டாக்டர் அம்பேத்கார் அவர்களின் கொள்கைகள்
என அனைத்து முக்கிய இசங்களிலிருந்தும் சிறந்தவைகள் கலந்த கலவைதான் பாமகவின் கொள்கை.
பாமக ஒரு வன்னியர் கட்சியா? - நிச்சயமாக இல்லை
பாமகவின் சட்டதிட்டங்களிலும் சரி கொள்கைகளிலும் சரி ஒரு இடத்தில் கூட வன்னிய சமுதாயத்தின் பெயரோ வன்னியர்களுக்காக என்றோ குறிப்பிடப்படவில்லை,
அதன் தொடக்க காலத்தில் பல மேல்மட்ட தலைவர்கள் தலித்,நாடார்,முசுலீம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள், இன்றும் கூட பல வன்னியரல்லாதோர் பாமகவில் கட்சி பொறுப்பிலும், சட்டமன்ற,பாராளமன்ற உறுப்பினராகவும்,ஏன் மத்திய அமைச்சராகவும் கூட இருக்கின்றனரே, பிறகெப்படி இது வன்னியர் கட்சி என முத்திரை குத்தப்பட்டது, அங்கேதான் நமது தமிழ் பத்திரிக்கை ஊடகம் விளையாடிவிட்டது, இது பற்றி விரிவாக இன்னொரு பத்தியில் பார்ப்போம்.
பாமக கொடியிலே உள்ள நீல நிறம் தலித் சமுதாயத்தையும்,
மஞ்சள் நிறம் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தையும்,
சிவப்பு கம்யூனிசத்தையும் குறிப்பவை.
பாமக உருவானதால் பாதிக்கப்பட்ட கட்சிகள் ?
பாமக உருவானதால் பாதிக்கப்பட்ட கட்சிகள் திமுகவும், காங்கிரசும் தான்.
வன்னியர்களின் வாக்கு வங்கி திமுகவிடமும்,காங்கிரசிடமும் இருந்தது, ஆனால் பாமக கிட்டத்தட்ட மொத்தமாக அந்த வாக்குவங்கியை தன் பக்கம் திருப்பிக்கொண்டது
திமுகவிற்கு அந்த கோபம் இன்னும் இருக்கின்றது, அதுவும் இல்லாமல் இட ஒதுக்கீட்டில் உயிரை கொடுத்து போராடியது வன்னிய இனம் ஆனால் இன்னும் 108 சாதியையும் பட்டியலில் இனைத்தது திமுக அரசாங்கம்
அந்த கோபமும் கருணாநிதி அவர்கள் ராசதந்திரமாக நினைத்துக்கொண்டு 1996 தேர்தலிலே செய்த கூட்டணி துரோகமும் இன்றைக்கும் கூட திமுக பாமக விடையே chemistry work out ஆகாமல் இருக்கிறது.திமுக வை எதிர்க்கும் போது பாமகவினர் காட்டும் ஆவேசம், அதிமுக வை எதிர்க்கும் போது காட்டுவதைவிட பல மடங்கு அதிகம்.